தமிழ் என்றால் இறை, உயிர், உறவு, முதல், உரிமை, அருமையான மொழிகளில் முதன்மையானது என்பது அறிந்த கருத்து. தமிழ் கற்பித்தலில் பேராசிரியர் மாணவர்கள் தொடுக்கும் வினாக்களுக்கு விடையளிப்பதும்,மாணவர்களின் பாடம் சம்பந்தப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதினாலும், கற்பித்தலில் நன்கு பயிற்சியளிப்பதன் மூலமும் பல்வேறு வழிகளில் திறமைப் பெற்றுள்ளதால் நன்கு கற்பித்தல் நடைபெறுகின்றது.
கல்வியியல் பட்டப்படிப்பில் தமிழ் கற்பித்தல் பிரிவில் முதலாம் ஆண்டில் கற்பிக்கும் முறைகளையும் இரண்டாம் ஆண்டில் பாடப்பொருள் விளக்கமளிப்பதில் தேர்ந்தவராக விளங்கவும் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகிறது.தமிழ் கற்பித்தலின் கலைத்திட்டமானது மொழிப் பாடத்தில் புரிந்துக் கொள்ளுதல், கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல் போன்றவற்றை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தின் (இரண்டு ஆண்டு கல்வியியல் படிப்பு) படி கற்பிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக விதிகள் மற்றும் பாடத்திட்டம்
பல்கலைக்கழக விதிகளின் படி பரிந்துரைக்கப்பட்ட உயர் வகுப்பினர் (OC) – 50%, பிற்படுத்தப்பட்டோர் (BC) – 45%, மிகவும் பிற்படுத்தப்பட்டவர் (MBC) – 43%, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் (SC&ST) – 40% என்ற தேர்ச்சி விகிதத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டத்தை தமிழ் மொழிப் பாடத்தில் பெற்ற மாணவர்கள் கல்வியியல் பட்டப்படிப்பு படிப்பதற்கு சேர்த்து கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் உள்ள தமிழ் கற்பித்தல் பாடப்பிரிவில் 25 மாணவ மாணவிகள் சேர்க்கப்படுகிறார்கள்.
மாணவ மாணவிகளுக்கு நுண்ணிலை கற்பித்தல், குறுநிலைக் கற்பித்தல் மற்றும் பெருநிலைக் கற்பித்தலில் நல்ல முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறந்த வல்லுனர்களால் வரைபடம் மூலம் விளக்குவதற்கும், நுண்ணிலை, குறுநிலை, பெருநிலைக் கற்பித்தல்களுக்கான பாடத்திட்டம் கற்பிப்பதற்கும் சிறந்த முறையில் விளக்கங்களுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது. கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரிப்பதற்கும், கரும்பலகையில் சிறந்த முறையில் எழுதுவதற்கும் தனிநபர் பயிற்சி அளிக்கப்படுகின்றது.