தமிழ் இலக்கிய ப் பேரவை

தமிழ் இலக்கிய ப் பேரவை 

 

 

 

மாணவ ஆசிரியர்களிடையே தமிழார்வத்தை மேம்படுத்தும் விதமாக தமிழ் இலக்கிய மன்றப் பேரவை செயல்பட்டு வருகிறது.   மாணவ ஆசிரியர்கள் தங்களுடைய பேச்சு, கவிதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றில் உள்ள திறமைகளை தங்களது கல்லூரியில் வெளிப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் பிற கல்லூரிகளிலும் வெளிப்படுத்துவதற்கு ஒரு களமாக இப்பேரவை செயல்பட்டு வருகிறது. கருத்தரங்கம் நடத்துவது, பட்டிமன்றம் நடத்துவது, முக்கியத் தினங்களைக் கொண்டாடுவது, இலக்கிய இணைய வழித்திறனறித் தேர்வு நடத்துவது, ஆசிரியர் தகுதித் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மொழிசார்ந்த பயிற்சி அளிப்பது, இணைய வழியிலான கட்டுரைப் போட்டி நடத்துவது என்று இப்பேரவை விரிவடைந்து செயல்பட்டு வருகிறது. மாணவர்களுடைய படைப்புகளை பிரபலமான செய்தித்தாளில் வெளிவர செய்வதில் இப்பேரவை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 

மாணவர்களுடைய மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட இத்தமிழ் இலக்கிய மன்றப் பேரவை மொழியறிவை வளர்த்தல், போட்டிகள் மூலம் கலையார்வத்தை ஊக்குவித்தல், பாரம்பரிய கலைகளைப் பாதுகாத்தல், இதழ்கள் வெளியிடுதல் போன்ற செயல்பாடுகளினால் தன்னை முதன்மைப்படுத்திக் கொள்கிறது.

 Click Here to Download the PDF

தமிழ் இலக்கியமன்றப் பேரவை